அத்தியாயம் 2
இஸ்ரவேலுடைய மகன்கள்
1 இஸ்ரவேலின் மகன்கள் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், 2 தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.
யூதாவின் மகன்கள்
3 யூதாவின் மகன்கள் ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று மகன்களும் சூவாவின் மகளான கானானிய பெண்ணிடம் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த மகன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாதவனானதால் அவர் அவனைக் கொன்றுபோட்டார். 4 யூதாவின் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் மகன்கள் எல்லோரும் ஐந்துபேர். 5 பாரேசின் மகன்கள் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள். 6 சேராவின் மகன்கள் எல்லோரும் சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர். 7 சாபத்தீடான காரியத்திலே துரோகம்செய்து இஸ்ரவேலைக் கலங்கச்செய்த ஆகார்* 2:7 யோசுவா 7 அதிகாரம் பார்க்க என்பவன் கர்மீ மகன்களில் ஒருவன். 8 ஏத்தானின் மகன்கள் அசரியா முதலானவர்கள். 9 எஸ்ரோனுக்குப் பிறந்த மகன்கள் யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
எஸ்ரோனின் மகனாகிய ராமிலிருந்து
10 ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா சந்ததியின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான். 11 நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான். 12 போவாஸ் ஓபேத்தைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான். 13 ஈசாய் தன்னுடைய மூத்த மகன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் மகனையும், சம்மா என்னும் மூன்றாம் மகனையும், 14 நெதனெயேல் என்னும் நான்காம் மகனையும், ரதாயி என்னும் ஐந்தாம் மகனையும், 15 ஓத்சேம் என்னும் ஆறாம் மகனையும், தாவீது என்னும் ஏழாம் மகனையும் பெற்றான். 16 அவர்களுடைய சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் மகன்கள், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர். 17 அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலனாகிய ஏத்தேர் என்பவன்.
எஸ்ரோனின் மகனாகிய காலேப்
18 எஸ்ரோனின் மகன் காலேப் எரீயோத்† 2:18 காலேபுடைய மகளாக இருக்கலாம் என்னப்பட்ட தன்னுடைய மனைவியாகிய அசுபாளாலே பெற்ற மகன்கள் ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள். 19 அசுபாள் இறந்த பின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள். 20 ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான். 21 பின்பு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தினுடைய தகப்பனாகிய மாகீரினுடைய மகளைத் திருமணம்செய்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள். 22 செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்து மூன்று ஊர்கள் இருந்தது. 23 கெசூரும், ஆராமும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் எடுத்துக்கொண்டார்கள்; இவர்கள் எல்லோரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் மகன்கள். 24 காலேபினுடைய ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்தபின்பு, எஸ்ரோனின் மனைவியாகிய அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
எஸ்ரோனின் மகனாகிய யெர்மெயேல்
25 எஸ்ரோனுக்கு முதலில் பிறந்த யெர்மெயேலின் மகன்கள் ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே. 26 அத்தாராள் என்னும் பெயருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய். 27 யெர்மெயேலுக்கு முதலில் பிறந்த ராமின் மகன்கள் மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள். 28 ஓனாமின் மகன்கள் சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் மகன்கள் நாதாப், அபிசூர் என்பவர்கள். 29 அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள். 30 நாதாபினுடைய மகன்கள் சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான். 31 அப்பாயிமின் மகன் இஷி; இஷியின் மகன் சேசான்; சேசானின் மகள் அக்லாய். 32 சம்மாயினுடைய சகோதரனாகிய யாதாவினுடைய மகன்கள், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான். 33 யோனத்தானின் மகன்கள், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் சந்ததி. 34 சேசானுக்கு மகள்களைத் தவிர மகன்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பெயருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான். 35 சேசான் தன்னுடைய மகளைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்கு திருமணம் செய்துகொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள். 36 அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான். 37 சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான். 38 ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான். 39 அசரியா எலேசைப் பெற்றான்; ஏலேஸ் எலெயாசாவைப் பெற்றான். 40 எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லூமைப் பெற்றான். 41 சல்லூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிஷாமாவைப் பெற்றான்.
காலேபின் சந்ததி
42 யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் மகன்கள் முதலில் பிறந்த சீப்பின் தகப்பனாகிய மேசாவும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் மகன்களுமே. 43 எப்ரோனின் மகன்கள் கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா என்பவர்கள். 44 செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான். 45 சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன். 46 காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான். 47 யாதாயின் மகன்கள் ரேகேம், யோதாம், கேசான், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள். 48 காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள். 49 அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் மகள் அக்சாள் என்பவள். 50 எப்ராத்தாளிடம் முதலில் பிறந்த ஊருடைய மகனாகிய காலேபினுடைய மகன்கள் கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும், 51 பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே. 52 கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் மகன்கள், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள். 53 கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், இத்ரியர்களும் பூகியர்களும் சுமாத்தியர்களும் மிஸ்ராவியர்களுமே; இவர்களிடம் சோராத்தியர்களும், எஸ்தாவோலியர்களும் பிறந்தார்கள். 54 சல்மாவின் சந்ததிகள் பெத்லெகேமியர்களும், நெத்தோப்பாத்தியர்களும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊர்க்காரர்களும், மானாத்தியர்களிலும் சோரியர்களிலும் பாதி மக்களுமே. 55 யாபேசில் குடியிருந்த வேத வல்லுனர்களுடைய வம்சங்கள் திராத்தியர்களும் சிமாத்தியர்களும் சுக்காத்தியர்களுமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியார்களான கேனியர்கள் இவர்களே.