சங்கீதம் 24
தாவீதின் பாடல்.
1 பூமியும் அதின் நிறைவும்,
உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை.
2 ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி,
அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார். 3 யார் யெகோவாவுடைய மலையில்* 24:3 இந்த மலையின் மேல் தான் தேவாலயம் கட்டப்பட்டிருந்தது. சீயோன் மலையில் ஏறி ஆலயத்தில் பிரவேசித்தது ஆண்டவரை ஆராதிப்பதாகும் ஏறுவான்?
யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்?† 24:3 நிலைநிற்பான்
4 கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து,
தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும்,
பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே.
5 அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும்,
தன்னுடைய இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.
6 இதுவே அவரைத் தேடி விசாரித்து,
அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா)
7 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;
நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.
8 யார் இந்த மகிமையின் இராஜா?
அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள யெகோவா;
அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே.
9 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;
நித்திய கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.
10 யார் இந்த மகிமையின் இராஜா?
அவர் சேனைகளின் யெகோவா;
அவரே மகிமையின் இராஜா (சேலா).
*சங்கீதம் 24:3 24:3 இந்த மலையின் மேல் தான் தேவாலயம் கட்டப்பட்டிருந்தது. சீயோன் மலையில் ஏறி ஆலயத்தில் பிரவேசித்தது ஆண்டவரை ஆராதிப்பதாகும்
†சங்கீதம் 24:3 24:3 நிலைநிற்பான்